முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 199. குறிஞ்சி - தலைவன் கூற்று
குறுந்தொகை - 199. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தாய் முதலியோர் தலைவியை வீட்டிற்கு அழைத்துச் செல்லஎண்ணியிருப்பதைத் தோழியால் அறிந்த தலைவன், “இனி இவளைப்பெறுவது அரிது போலும்! ஆயினும் என் காமநோய் என்றும் அழியாதது;பிறவிதோறும் தொடர்ந்து வருவது” என்று நெஞ்சை நோக்கிக் கூறியது.)
பெறுவ தியையா தாயினும் உறுவதொன் றுண்டுமன் வாழிய நெஞ்சே திண்டேர்க் கைவள் ளோரி கானந் தீண்டி எறிவளி கமழு நெறிபடு கூந்தல் மையீ ரோதி மாஅ யோள்வயின் |
5 |
இன்றை யன்ன நட்பி னிந்நோய் இறுமுறை எனவொன் றின்றி மறுமை யுலகத்து மன்னுதல் பெறுமே. |
|
- பரணர். |
முடிபு: நெஞ்சே, இந்நோய் மறுமையுலகத்தும் மன்னுதல் பெறும்;பெறுவது இயையாதாயினும் உறுவதொன்றுண்டு.
கருத்து: இனி இம்மையில் தலைவியைக் காணப்பெறேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 197 | 198 | 199 | 200 | 201 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 199. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், நெஞ்சே, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, மன்னுதல், மறுமை, ஒன்று, அடையும், இன்றை, தலைவியை, எட்டுத்தொகை, சங்க, என்றும், தீண்டி