முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 401. நெய்தல் - தலைவி கூற்று
குறுந்தொகை - 401. நெய்தல் - தலைவி கூற்று
(இற்செறிக்கப்பட்ட தலைவி, “நாம் தலைவனோடு மெய் தோய்ந்தநட்பு, பின்னர் அவனோடு விளையாடுதலையும் நீக்கியது” என்றுகூறியது.)
அடும்பி னாய்மலர் விரைஇ நெய்தல் நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல் ஓரை மகளி ரஞ்சியீர் ஞெண்டு கடலிற் பரிக்குந் துறைவனொ டொருநாள் நக்குவிளை யாடலுங் கடிந்தன் |
5 |
றைதே கம்ம மெய்தோய் நட்பே. | |
- அம்மூவனார். |
முடிபு: நட்பு கடிந்தன்று; ஐதேகம்ம.
கருத்து: தலைவனோடு அளவளாவியதனால் உண்டான வேறுபாடு அவனைக் காணாமலிருக்கச் செய்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 401. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, நெய்தல், குறுந்தொகை, தலைவனோடு, கூற்று, விளையாடுதலையும், எட்டுத்தொகை, சங்க