சேது - காட்சி 40 - பகல் - INT. / மருத்துவமனை
குளோஸ் ஷாட் - இருண்ட திரையின் இடப்பக்கம் கம்ப்யூட்டர் மானிட்டரில் மங்கலான எழுத்துக்கள் தெரிய, வலப்பக்கம் ஸ்கேன் மெஷினில் தலையில் கட்டுடன் சேது படுக்க வைக்கப்பட்டிருக்கறான்.
குளோஸ் ஷாட் - அண்ணி. அண்ணன், அழுதபடி ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர்.
மிட் ஷாட் - ஸ்கேன் மெஷினில் சேது சோதிக்கப்படுகிறான்.
குளோஸ் ஷாட் - அண்ணி வாய்ப்பொத்தி அழுகிறாள். குளோஸ் ஷாட் - ஸ்கேன் செய்யப்படும் சேது. குளோஸ் ஷாட் - அண்ணி அழுகிறாள். அண்ணன் கண்ணீருடன் பார்க்கிறார்.
குளோஸ் ஷாட் - சேதுவின் நண்பர்கள் சோகமாக அமர்ந்திருக்கின்றனர். மிட் ஷாட் - ஸ்கேனிங் ரூமிலிருந்து வரும் டாக்டர் கம்ப்யூட்டர் இயக்குகிறார்.
குளோஸ் ஷாட் - அண்ணி, அண்ணன் கண்ணீருடன் டாக்டரைப் பார்க்கின்றனர்.
குளோஸ் ஷாட் - டாக்டர். குளோஸ் ஷாட் - கம்ப்யூட்டரில் சேதுவின் ஸ்கேனிங் படம்.
குளோஸ் ஷாட் - 'ப்ச்' என்று வருத்தப்படுகிறார் டாக்டர். மிட் ஷாட் - கம்ப்யூட்டரை பார்த்தபடி உட்காருகிறார் டாக்டர். பிறகு ஃபைலைப் பிரித்து எழுதுகிறார்.
குளோஸ் ஷாட் - அண்ணன் அண்ணி அவரைப் பார்க்கின்றனர்.
குளோஸ் ஷாட் - சேதுவின் ரிப்போர்ட் ஃபைலில் ADMITTED என்று சீல் வைக்கிறார் டாக்டர். குளோஸ் ஷாட்/லோ ஆங்கிள் - மனநல மருத்துவ மையம் ராமநாதபுரம் என்ற நுழைவாயில்.
குளோஸ் ஷாட் - அண்ணி வாயைப் பொத்தி அழ, அண்ணனும் அழுதபடி பார்க்கிறார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 38 | 39 | 40 | 41 | 42 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், டாக்டர், அண்ணன், ஸ்கேன், சேதுவின், பார்க்கின்றனர்