முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 344. முல்லை - தலைவி கூற்று
குறுந்தொகை - 344. முல்லை - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில் வருந்திய தன்னை வற்புறுத்துந்தோழியை நோக்கி, “இக்காலத்தில் தம்மைப் பிரிந்து சென்ற தலைவர்வரப்பெறும் பேறுடைய மகளிர் தவஞ்செய்தாராவார்; யான் அதுபெற்றிலேன்” என்று தலைவி கூறியது.)
நோற்றோர் மன்ற தோழி தண்ணெனத் தூற்றுந் துவலைப் பனிக்கடுந் திங்கட் புலம்பயி ரருந்த அண்ண லேற்றொடு நிலந்தூங் கணல வீங்குமுலைச் செருத்தல் பால்வார்பு குழவி யுள்ளி நிரையிறந் |
5 |
தூர்வயிற் பெயரும் புன்கண் மாலை அரும்பெறற் பொருட்பிணிப் போகிப் பிரிந்துறை காதலர் வரக்காண் போரே. |
|
- குறுங்குடி மருதனார். |
முடிபு: தோழி, மாலையில் காதலர் வரக்காண்போர் நோற்றோர் மன்ற.
கருத்து: தலைவர் இப்பொழுது வந்திலராதலின் யான் வருந்துவேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 342 | 343 | 344 | 345 | 346 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 344. முல்லை - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, முல்லை, தோழி, குறுந்தொகை, மன்ற, காதலர், நோற்றோர், சென்ற, எட்டுத்தொகை, சங்க, யான்