புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 65
கூடினேன் கரும்பாம்பு செவ்வாய் நீலன் |
இன்னுமொரு செய்தியையும் நீ கேட்பாயாக! கரும் பாம்பு எனச் சொல்லப்படும் இராகுவும், செவ்வாயும் நீலன் எனும் சனிபகவானும் ஒருமனையில் கூடிநிற்க ஸ்திரீகளால் தனசேர்க்கை ஏற்படும். கீர்த்திமிகு வீடு கட்டுவான். அச்சென்மனுக்கு சுகம் உண்டு. எனது சற்குருவான போகமகா முனிவரது பேரருட்கருணையால் நான் கூறும் இம்மொழி தவறாது. எனினும் சில வேளைகளில் அழுதாலும் ஊழ்வினைப் பயன் விட்டுப் போகுமா என்ன? எனவே சிற்சில அமடுகளும் (துன்பங்களும்) வந்து சேரும் என்று திடமாகச் சொல்வாயாக.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 63 | 64 | 65 | 66 | 67 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 65 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -