முதன்மை பக்கம் » ஜோதிடம் » வேத ஜோதிடம் » புலிப்பாணி ஜோதிடம் 300 » பாடல் 278 - திசா, புத்தி பலன் கூறும் முறை
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 278 - திசா, புத்தி பலன் கூறும் முறை
ஆமென்ற நவக்கிரகந் திசைபுத்திபலனை |
சூரியாதி நவக்கிரங்களின் திசைகளைப் பற்றியும் புத்திகளைப் பற்றியும் உளதான பலன்களை அணு அணுவாக நீ விளங்கும் வண்ணம் உரைத்தோம். இதை உமது அனுபோகத்தில் அனுசரித்துப் பார்த்து உண்மை நிலையை நன்கு கொள்க. மேலும் திசை, புத்தி, அந்தரம் ஆகிய பலன்களையும் கூறியமையும் காண்க. இன்னும் கிரகங்களின் ஆட்சி, உச்சம், நீசம் மற்றும் அவை சார்ந்திருக்கும் பகைக்கிரகங்களின் சாரம் இவையாதியானவற்றை நன்கு மனத்திற் பொருத்தி அவர்க்கு ஜாதகப் பலனை உரைப்பாயாக எனப்போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
இப்பாடலில் திசா, புத்தியின் பலன் கூறும் முறையைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 276 | 277 | 278 | 279 | 280 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 278 - திசா, புத்தி பலன் கூறும் முறை - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -