புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 102
பாரப்பா யின்ன மொன்று பகரக்கேளு |
இன்னுமொரு முக்கியமான செய்தியினையும் நான் கூறுகிறேன். இதனையும் நீ நன்குணர்ந்து ஆராய்ச்சி அறிவுடன் கொள்வாயாக! பிரசித்தி பெற்ற சூரிய பகவானுக்கு திரிகோண ஸ்தானத்தில் (1,5,9 ஆகிய இடங்களில்) அமிர்த கலையுள்ள சந்திரன் பலமுற்ற அச்சாதகனுக்கு பலவிதத்தாலும் செல்வங்கள் சேருமென்றாலும், அரிஷ்டமும் உண்டு. எனினும் காக்கும் கோள் உண்டாதலின் அதனால் குறையொன்றும் இல்லவே இல்லை. நடு நிசியில் சப்தங்களைக் கேட்பவானாக இருப்பான். அச்சாதகனுக்கு 78-ஆம் வயதில் கூற்றுவனார் வருவார் என்பதனை ஏனைய கிரகங்களையும் எண்ணி உன் குறிப்பைச் சொல்வாயாக.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 100 | 101 | 102 | 103 | 104 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 102 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -