சேது - காட்சி 27 - பகல் - INT. / கல்லூரி
மிட் ஷாட் - கல்லூரி உள்ளே நடைபாதையில் எதிரணி ஆட்கள் உட்கார்ந்திருக்கின்றனர். பாட்டுப் பாடியபடி சேதுவின் நண்பன் வருகிறான். வரும்போது ஒரு பெண்ணை பயமுறுத்தியபடி வருகிறான்.
நண்பன் : நான் செத்துப் பொழைச்சவண்டா... அந்த எமனைப் பார்த்துச் சிரிச்சவன்டா... ஹஹ்ஹா....
எதிரணி ஆளின் காலை தெரியாமல் மிதித்து விடுகிறான். எதிரணி ஆள் அவனை சட்டையைப் பிடிக்கிறான்.
நண்பன் : ஸாரி....
குளோஸ் ஷாட் - எதிரணி ஆள் : ஸாரி சொன்னா சரியாப் போச்சா....?
எதிரணி ஆள் சேதுவின் நண்பனை அடிக்கிறான்.
நண்பன் : ஏய், என்னடா.... என்ன..?
சேதுவின் நண்பனை எதிரணி ஆள் அடித்து, கீழே தள்ளி உதைக்கிறான். அவன் அலறுகிறான். அதை ஊமைப் பெண் பார்க்கிறாள். சேதுவிடம் ஓடுகிறாள்.
குளோஸ் ஷாட் - சேதுவிடம் ஊமைப்பெண் சைகையால் சொல்கிறாள்.
மிட் ஷாட் - சேது எதிரணி ஆளை அடிக்கிறான். சிலர் தப்பி ஓடுகிறார்கள்.
மிட் ஷாட் - அப்போது அபிதா அங்கு வர அவளைப் பார்த்ததும் அடிப்பதை நிறுத்துகிறான் சேது.
குளோஸ் ஷாட் - அபிதா அவனைப் பார்க்கிறாள். மிட் ஷாட் - அடிப்பதை நிறுத்திய சேது அபிதாவைப் பார்க்கிறான்.
குளோஸ் ஷாட் - அபிதாவும் தோழியும் அவனைப் பார்க்கின்றனர்.
மிட் ஷாட் - அந்த இடத்தைவிட்டு சேது போகிறான்.
குளோஸ் ஷாட் - அபிதாவும் போகிறாள்.
காட்சி 27 A - பகல் - EXT . / கல்லூரி வெளிப்புறம்
டைட் குளோஸ் ஷாட் - சேது இறுக்கமா இருக்கிறான்.
மிட் ஷாட் - மாடிப் படியில் சேது உட்கார்ந்திருக்க அங்கே நண்பர்கள் வருகின்றனர்.
நண்பன் : ஏய், உங்களுக்கு சூடு, சொறனை, எதுவும் கிடையாதா? இன்னும் ஏண்டா எங் பின்னாடி வர்றீங்க? போடா.... போங்கடா....அடி வாங்கிட்டு வந் நிக்கிறாங்க.... பாருங்க... வெட்கம் கெட்டப் பசங்க....
குளோஸ் ஷாட் - சேது
மிட் ஷாட் - நண்பன் : உங்களை அடிச்சா நாங்க வருவோமுன்னு நினைச்சியா...
குளோஸ் ஷாட் - சேது.
நண்பன் குரல் (Overlap) : எங்களுக்கு வேற வேலை இல்லை...?
மிட் ஷாட் - நண்பன் : ஏய், உன்னையும்தான் ஏதாவது பொண்ணுக்குப் பின்னாடி சுத்துறதா இருந்தா முன் கூட்டியே சொல்லிடு... நான் கழண்டுக்கிறேன்.
மிட் ஷாட் - நண்பன் : போக மாட்டீங்ளா... போடா... போய் பாவாடை, தாவணி ஏதாவது இருந்தா கட்டிட்டு வாங்க... அப்ப சப்போர்ட் பண்றோம்.
மற்ற நண்பர்களை விரட்டுவது போல் சேதுவை கேலி பேசுகிறான். குளோஸ் ஷாட் - ஊமை வேடிக்கை பார்க்கிறாள். குளோஸ் ஷாட் - நண்பனை சேது முறைக்கிறான்.
சேது : ஏய்...?
மிட் ஷாட் - நண்பன் : நான் உன்னைச் சொல்லலை.... இங்கே பேசுறேன்...
என்றவன் சேது அருகில் செல்கிறான்.
நண்பா : காசு கொடுத்தா நூறு பேரு வருவாளுங்கடா... இன்னைக்கு உன்னக் கிறங்க அடிச்சிட்டு நாளைக்கு வேற எவனையாவது கட்டிட்டுப் போகப்போறா... அப்ப போய் அவகிட்டே... போ...
குளோஸ் ஷாட் - சேது முகத்தில் கோபம். மிட் ஷாட் - சேது, நண்பனை அடிக்கிறான். நண்பன் திருப்பி சேதுவை அடிக்கிறான். குளோஸ் ஷாட் - ஊமை பதறுகிறாள். மிட் ஷாட் - மற்ற நண்பர்கள் தடுத்தும் மீண்டும் மீண்டும் நண்பனை சேது உதைக்கிறான்.
மிட் ஷாட் - நண்பன் : சிய்யான் வேண்டாம்டா சிய்யான்...
சேது : என்னடா சிய்யான்?
நண்பன் அலறுவதைப் பொருட்படுத்தாமல் சேது அடிகிறான். மாடிப் படியில் அவனை உருட்டிவிட்டு தரதரவென இழுத்து வருகிறான்.
குளோஸ் ஷாட் - சேதுவின் மற்ற நண்பர்கள் அதிர்ச்சியடைகின்றனர்.
சேது : கையா நீட்டுறே...
மிட் ஷாட் - சேது நண்பனை அடித்து உதைத்தபடி இரயில்வே ஸ்டேஷனுக்கு வருகிறான். இரயில் கடந்து போகிறது. ஊமை நண்பனைக் காப்பாற்ற முயற்சிக்க 'போடி' என்று அவளையும் உதைக்கிறான் சேது.
சேது : பார்க்காதடா...
மறுபடியும் நண்பனை அடிக்கிறான்.
மிட் ஷாட் - நண்பன் : அடிடா... அடிடா அது ஒண்ணுதான் பாக்கி... அதையும் செஞ்சுட்ட... போதுமடா சாமி....
அழுதுகொண்டே கும்பிடு போட்டுவிட்டுச் செல்கிறான். அவன் பின்னால் அழுதபடி ஊமையும் செல்ல சேது மட்டும் நிற்கிறான். நண்பனை நினைத்து வருந்துவது போல் தலையில் அடித்துக் கொள்கிறான் சேது.
- - - - - - இடைவேளை - - - - - -
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - நண்பன், குளோஸ், நண்பனை, எதிரணி, அடிக்கிறான், சேதுவின், வருகிறான், சிய்யான், நண்பர்கள், உதைக்கிறான், பார்க்கிறாள்