சிவகங்கை - தமிழக மாவட்டங்கள்
புவிவளம்:
இம்மாவட்டத்தில் பூமிக்கடியில் பல கனிமங்கள்கிடைக்கின்றன.
சுண்ணாம்புக்கல்:
சிமெண்டுத் தயாரிக்கப் பயன்படும் சுண்ணாம்புக் கல் இம்மாவட்டத்தில் பல பகுதிகளில் கிடைக்கிறது. சுண்ணாம்புக்கற்கள், பிளீச்சிங் பவுடர் மற்றும் கால்சியம் கார்பைடு ஆகியவற்றின் உற்பத்திக்கும் உதவுகின்றன.
பெட்ரோல்:
தேவக்கோட்டைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது அப்பகுதியில் பெட்ரோல் கிடைக்கலாமென்று கருதப்படுகிறது.
இரும்புக்கனி:
கானாடு காத்தான் பகுதியைச் சுற்றிலும் இரும்புக் கனிகள் சிறிதளவு உள்ளன.
நிலக்கரி:
காரைக்குடிக்கு அருகே 1963 இல் உயர்ந்த பழுப்பு நிலக்கரி கிடைத்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஏனோ மேற்கொண்டு இத்திட்டம் கைவிடப்பட்டது.
பாறைகள்:
திருப்பத்தூர் வட்டம் பூலாங்குறிச்சியிலுள்ள காஞ்சாத்து மலைப்பகுதியில் 40 ச.கி.மீ. பரப்பளவுக்கு பாறைகள் உள்ளன. பாறைகளைக் குறித்து ஆய்வு செய்ய ஏற்ற இடம். வழுக்குப் பாறைகள் காண்பதற்கு அரிய காட்சியாகும்.
நீரூற்றுக் கிணறுகள்:
இக் கிணறுகள் காரைக்குடிப் பகுதியில் மிகுதியாக உள்ளன.
மஞ்சள் காவி:
சிவகங்கையில் காணப்படும் முட்காடுகள், காட்டூரணி போன்ற பகுதிகளில் வெள்ளைக் களிமண் இருக்கிறது. சிவகங்கை நகர் எல்லையில் பல லட்சம் டன் மஞ்சள் காவி கிடைக்கலாம் என்கின்றனர். இது பல வண்ணப் பெயிண்டுகள் தயாராக்கப் பயன்படுகிறது. இப்பகுதியில் கிடைக்கும் ஒரு வகை ஈயமும் பெயிண்டு தயாரிப்புக்கு முக்கியத் துணைப் பொருளாகும்.
கிரைபைட்:
உலகில் மிகவும் தரம் வாய்ந்த கிராபைட் கனிமம் இம்மாவட்டத்தில் கிடைக்கிறது.
களிமண்:
எஃகு ஆலைகளுக்குத் தேவைப்படும் ஒருவகைக் களிமண், நாட்டரசன் கோட்டையிலும், சிவகங்கைக்கு அருகே பழைய மாங்குடி, சங்கிலிப்பட்டி, புதுப்பட்டி, குசவனுடைப்பு முதலிய ஊர்களிலும் கிடைக்கிறது. இம்மண்ணில் தாராகும் செங்கற்கள் சூடு, உலோகக் கசடு ஆகியவற்றைத் தாங்கும் சக்தி பெற்றவை.
வேளாண்மை:
ஆறுகளும், ஏரிகளும், குளங்களும் வேளாண்மைக்கு உதவுகின்றன. மொத்தப் பரப்பளவில் 1.04 லட்சம் ஹெக்டெர் நிலப்பரப்பில் சாகுபடி நடைபெறுகிறது. சிவகங்கை வட்டத்தில் வைகையும், பெரியாற்றுக்காலும், மானாமதுரை வட்டத்தில் வைகையும், தேவகோட்டை வட்டத்தில் வரிசலையாறும், திருப்பத்தூர் வட்டத்தில் பாலாறும், மணிமுத்தாறும், காரைக்குடி வட்டத்தில் குண்டாறும் மணிமுத்தாறும், உப்பாறும் பாய்ந்து உழவுத்தொழில் செழிப்புற உதவுகின்றன. ஆனால் பெரும்பாலும் இம்மாவட்டத்தில் மழையை நம்பியே வேளாண்மையில் ஈடுபடுகின்றனர். நீர்ப்பாசனம் தேவைப்படும் பயிர்களான நெல், வாழை, கரும்பு, வேர்க்கடலை முதலியவற்றையும் தண்ணீர் அதிகம் தேவைப்படாத பயிர்களான மல்லி, மிளகாய், பருத்தி, வரகு, கொள்ளு முதலியவற்றையும் பயிரிடுகின்றனர். ஏரி மற்றும் கிணற்றுப் பாசனம் நடைமுறையில் உள்ளது. நீர்ப்பாசனம் செய்யப்படும் நிகரப் பரப்பளவு 58,126 ஹெக்டெர் ஆகும். நெல் 10,991 ஹெக்டெரிலும், கரும்பும் கேழ்வரகும் 6008 ஹெக்டெரிலும், வேர்க்கடலை 10752 ஹெக்டெரிலும், கரும்பு 2584 ஹெக்டரிலும், பருத்தி 791 ஹெக்டெரிலும் விளைவிக்கப்படுகின்றன.
தொழிற்சாலைகள்:
கயிறு, பி.வி.சி. குழாய்கள், காகிதம், வேதிப் பொருட்கள், நைலான் சிப், சாம்பல் நூல், நவீன அரிசி ஆலைகள், அச்சகங்கள் போன்ற தொழில்கள் நடைபெறுகின்றன. சிறிய மற்றும் நடுத்தர ஆலைகளையும் சேர்த்து மொத்தம் 3117 தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
கிராம மற்றும் குடிசைத் தொழில்கள்:
கைத்தறி நெசவு அலகுகள் - 5408
கதர் அலகுகள் - 989
பாய் நெசவு அலகுகள் - 302
கூடை முடைதல் - 207
பனை ஓலை முடைதல் - 307
பதநீர் இறக்குபவர்கள் - 968
பனைவெல்லம் தயாரிப்பு அலகுகள் - 723
மட்பாண்ட அலகுகள் - 862
செங்கல் சுண்ணாம்பு ஆலைகள் - 678
இரும்பு பட்டறைகள் - 366
தச்சு வேலை - 379
கயிற்றுத் தொழில் - 218
செருப்பு - 298
தோல் பதனிடுதல் - 989
தீப்பெட்டி அலகுகள் - 12
கைவினைப் பொருள் அலகுகள் - 117
பிற தொழில்கள் - 2080
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவகங்கை - Sivaganga - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - அலகுகள், சிவகங்கை, வட்டத்தில், ஹெக்டெரிலும், இம்மாவட்டத்தில், tamilnadu, தமிழக, மாவட்டங்கள், களிமண், பாறைகள், தொழில்கள், உதவுகின்றன, தகவல்கள், தமிழ்நாட்டுத், கிடைக்கிறது, நெல், நீர்ப்பாசனம், பயிர்களான, மணிமுத்தாறும், கரும்பு, ஆலைகள், நெசவு, முடைதல், | , வைகையும், தொழிற்சாலைகள், முதலியவற்றையும், பருத்தி, வேர்க்கடலை, காவி, பெட்ரோல், பகுதியில், ஆய்வு, பகுதிகளில், information, sivaganga, districts, நிலக்கரி, அருகே, லட்சம், தேவைப்படும், போன்ற, மஞ்சள், திருப்பத்தூர், கிணறுகள், ஹெக்டெர்