முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 4.091.திருவையாறு
நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 4.091.திருவையாறு
4.091.திருவையாறு
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர்.
தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை.
873 | குறுவித்த வாகுற்ற நோய்வினை காட்டிக் உறுவித்த வாவுற்ற நோய்வினை தீர்ப்பா அறிவித்த வாறடி யேனையை யாற செறிவித்தவாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் |
4.091.1 |
என் முன்னைய குற்றமாகிய வினைகள் இப்பிறப்பில் எனக்கு அவற்றின் பயனாகிய நோயினைக் காட்டி என்னைக்குறுகச் செய்தன. அங்ஙனம் வினைப்பயனாக வந்த நோய்கள் என்னால் பொறுக்கும் அளவினவாய் அல்லாதபடி மிகுவிக்கப்பட்டன. அந்நிலையில் யான் உற்ற நோயாகிய வினைப்பயனைப் போக்க ஐயாறன் திருவுள்ளம்பற்றி அடியேனைத் தன் அடிமைத் தொண்டுகள் செய்யுமாறு அறிவித்துத் தன் பொன்போன்ற திருவடிக்கீழ், பொருந்துமாறு தொண்டனாக செய்த செயலுக்குக் காரணம் அவன் கருணையேயன்றி வேறு யாதாக இருத்தல் கூடும்?
874 | கூர்வித்த வாகுற்ற நோய்வினை காட்டியுங் ஊர்வித்த வாவுற்ற நோய்வினை தீர்ப்பா ஆர்வித்த வாறடி யேனையை யாற சேர்வித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் |
4.091.2 |
என் முன்னைய குற்றமாகிய வினைகள் இம்மையில் எனக்கு அவற்றின் பயனாகிய நோயினைக் காட்டித் துயரை மிகுவித்தன. அங்ஙனம் வந்த நோய்கள் என்னைத் தவறான வழியில் செல்லச் செய்தன. அந்த நிலையில் அடியேன் உற்ற நோயைத் தீர்க்கத் திருவுள்ளம் பற்றி அடியேனைத் தன் அடிமைத் தொண்டுகளில் பொருத்துவித்துத் தன் பொன்னடிக் கீழ்த் தொண்டனாகச் சேருமாறு ஐயாறன் செய்த செயலுக்குக் காரணம் அவன் கருணையேயன்றிப் பிறிதில்லை.
875 | தாக்கின வாசல மேவினை காட்டியுந் நீக்கின வாநெடு நீரினின் றேற ஆக்கின வாறடி யேனையை யாற நோக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் |
4.091.3 |
என் முன்னைய வினை என்னைத் தண்டித்தற்கு உரிய சூலை நோயால் தாக்கியது. பின் சமணர்களின் வஞ்சனைச் செயல்களைக் காட்டி என் உயிரைப் போக்க முற்பட்டது. அந்நிலையில் ஐயாறன் என்னைக் கடலினின்றும் கரையேறச் செய்யவேண்டும் என்று திருவுள்ளம் பற்றித் தன் அடிமைத் தொண்டு செய்ய அடியேனை வழுக்களைந்து கொண்டு திருவடிக் கீழ்த் தொண்டனாகச் செய்த செயல் நிர்ஹேதுக கிருபையாலாகியதே.
876 | தருக்கின நான்றக வின்றியு மோடச் நெருக்கின வாநெடு நீரினின் றேற உருக்கின வாறடி யேனையை யாற பெருக்கின வாதொண்டனேனைத்தன் பொன்னடிக் |
4.091.4 |
நான் வினைப் பயனைத் தாங்கும் ஆற்றலில்லேனாய்த் தடுமாறி ஓடுமாறு செருக்குற்ற என் முன்னைவினை வஞ்சனையாக என்னை நெருக்க அடியேனைத் துன்பக் கடலிலிருந்து கரையேறச் செய்யத் திருவுள்ளம் பற்றி ஐயாறன் தன் அடிமைத் தொண்டில் உருகச் செய்து அடியேனைத் தன் பொன்னடிக் கீழ் தொண்டனாக மேம்படுத்திய செயல் அவனுடைய காரணம் பற்றாக் கருணையின் விளைவேயாகும்.
877 | இழிவித்த வாறிட்ட நோய்வினை காட்டி கழிவித்த வாகட்ட நோய்வினை தீர்ப்பான் அழிவித்த வாறடி யேனையை யாற தொழுவித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் |
4.091.5 |
என் முன்னைவினை எனக்கு நோயைக் காட்டி என்னை நிலையிலிருந்து இறங்கச் செய்து துன்புறுத்தி உயிரைப் போக்க முற்பட்ட அளவில், ஐயாறன் அடியேனுடைய துயரம் போக்கித் தன் திருவடிக்கண் தொண்டனாகக் தன்னைத் தொழுமாறு செய்த செயல் அவனுடைய காரணம் பற்றாக் கருணையின் விளைவேயாகும்.
878 | இடைவித்த வாறிட்ட நோய்வினை காட்டி உடைவித்த வாறுற்ற நோய்வினை தீர்ப்பா அடைவித்த வாறடி யேனையை யாற தொடர்வித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் |
4.091.6 |
என் முன்னைவினை எனக்கு நோயைத் தந்து வருத்தித் துன்பத்தில் ஆழ்த்தி உயிரைப் போக்கும் நிலையினதாக. ஐயாறன் அடியேனுக்குத் துயரம் தந்த வினையைப் போக்கத் திருவுள்ளம் பற்றி, அடியேனைத் தன் அடிமைத் தொண்டில் சேர்த்துத் தன் திருவடிக்கண் தொண்டனாகத் தொடர்ந்து பணி செய்யுமாறு செய்த செயல் அவனுடைய காரணம் பற்றாக் கருணையின் விளைவே யாகும்.
879 | படக்கின வாபட நின்றுபன் னாளும் அடக்கின வாறது வன்றியுந் தீவினை மடக்கின வாறடி யேனையை யாற தொடக்கினவா தொண்டனேனைத்தன் பொன்னடிக் |
4.091.7 |
என் முன்னை வினை பலநாளும் துயருறுமாறு என்னைத் தாழ்த்தி நோயினால் என்னைச் செயலற்றவன் ஆக்கிய நிலையில் ஐயாறன் அடியேனுடைய வினைப்பயனாகிய பாவங்களை எல்லாம் செயலற்றன ஆக்கித் தன் அடிமைத் தொண்டில் அடியேனைத் திருப்பித் தன் பொன்னடித் தொண்டனாகத் தொடக்கி, திருத்தொண்டு செய்யுமாறு செய்த செயல் அவன் கருணையின் விளைவேயாம்.
880 | மறப்பித்த வாவல்லை நோய்வினை காட்டி துறப்பித்த வாதுக்க நோய்வினை தீர்ப்பா இறப்பித்த வாறடி யேனையை யாற சிறப்பித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் |
4.091.8 |
என் முன்னை வினை எனக்கு நோயைக் காட்டி என் அறிவு நிறைவு ஓர்ப்பு கடைப்பிடி என்பனவற்றை மறக்கச்செய்ய, அங்ஙனம் மறக்கச் செய்த நோய் என் உயிர் உடலைத் துறக்கச்செய்ய முற்பட்ட நேரத்தில் ஐயாறன் அடியேனுடைய வினையைப் போக்கத் திருவுள்ளம் பற்றி அடியேனைத் தன் அடிமைத் தொண்டில் ஈடுபட்டுப் பண்டைத் துயரங்களைக் கடக்கச் செய்து, தன் திருவடிக்கண் தொண்டனாகுமாறு சிறப்பித்த செயல் அவன் கருணையின் விளைவேயாகும்.
881 | துயக்கின வாதுக்க நோய்வினை காட்டித் இயக்கின வாறிட்ட நோய்வினை தீர்ப்பா அயக்கின வாறடி யேனையை யாற மயக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் |
4.091.9 |
என் முன்னை வினை எனக்கு நோயைத் தந்து சோர்வடையச் செய்ய, அந்நோய் தான் விரும்பியபடி அடியேன் உடலைச் செயற்படுத்த அந்நிலையில் ஐயாறன் அடியேனுடைய நோயையும் அதற்குக் காரணமான வினையையும் தீர்க்கத் திருவுள்ளம் பற்றித் தன் அடிமைத் தொண்டில், அடியேனை நோயிலனாக ஈடுபடுத்தித் தன் பொன்னடித் தொண்டனாகத் தன் திருத்தொண்டில் கலக்குமாறு செய்த செயல் அவன் கருணையின் விளைவேயாகும்.
882 | கறுத்துமிட் டார்கண்டங் கங்கை சடைமேற் இறுத்துமிட் டாரிலங் கைக்கிறை தன்னை அறுத்துமிட் டாரடி யேனையை யாற பொறுத்துமிட் டார்தொண்ட னேனைத்தன் பொன்னடிக் |
4.091.10 |
ஐயாற்றெம் பெருமானார் நீலகண்டராய், கங்காதரராய், இராவணன் இருபது தோள்களையும் நெரித்தவராய், அடியேனைத் தம் அடிமைத் தொண்டில் வேற்றுப் பணிகளை அறுத்து அதன் கண்ணேயே ஈடுபடுமாறு செய்தவராய்த் தம் பொன்னடிக்கீழ் அடியேன் தொண்டனாகுமாறு அடியேனுக்கு ஆதாரமாக அமைந்துவிட்டார். இதற்குக் காரணம் என்னை? அப்பெருமானுடைய காரணம் பற்றாக் கருணையின் விளைவே அடியேனை அப்பெருமானுடைய திருத்தொண்டில் ஈடுபடுத்தியது.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 89 | 90 | 91 | 92 | 93 | ... | 113 | 114 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவையாறு - நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நோய்வினை, பொன்னடிக்கீழெனையே, யேனையை, அடிமைத், ஐயாறன், அடியேனைத், னேனைத்தன், காரணம், கருணையின், திருவுள்ளம், எனக்கு, தொண்டில், வாதொண்ட, விளைவேயாகும், காட்டி, பற்றாக், அடியேனுடைய, அவனுடைய, உயிரைப், அடியேனை, என்னைத், நோயைத், செய்து, வாறிட்ட, அடியேன், செய்யுமாறு, திருவடிக்கண், தொண்டனாகத், முன்னை, முன்னைய, அந்நிலையில், அங்ஙனம், முன்னைவினை, பொன்னடித், வாதுக்க, திருத்தொண்டில், தொண்டனாகுமாறு, அப்பெருமானுடைய, விளைவே, துயரம், வினையைப், போக்கத், முற்பட்ட, நோயைக், தீர்க்கத், அவற்றின், பயனாகிய, நோயினைக், செய்தன, வினைகள், குற்றமாகிய, திருமுறை, திருச்சிற்றம்பலம், வாகுற்ற, வாவுற்ற, நோய்கள், தொண்டனாக, தொண்டனாகச், வாநெடு, நீரினின், கரையேறச், கீழ்த், பொன்னடிக், செயலுக்குக், நிலையில், திருவையாறு, பற்றித்