முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 88. கொடைச் சிறப்பும் காம இன்பச் சிறப்பும் உடன்
கூறி, வாழ்த்துதல்
பதிற்றுப்பத்து - 88. கொடைச் சிறப்பும் காம இன்பச் சிறப்பும் உடன் கூறி, வாழ்த்துதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : கல் கால் கவணை
வையகம் மலர்ந்த தொழில் முறை ஒழியாது, கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து, தெண் கடல் வளைஇய மலர் தலை உலகத்து, தம் பெயர் போகிய ஒன்னார் தேய, துளங்கு இருங் குட்டம் தொலைய, வேல் இட்டு; |
5 |
அணங்குடைக் கடம்பின் முழுமுதல் தடிந்து; பொரு முரண் எய்திய கழுவுள் புறம் பெற்று; நாம மன்னர் துணிய நூறி, கால் வல் புரவி அண்டர் ஓட்டி, சுடர் வீ வாகை நன்னற் தேய்த்து, |
10 |
குருதி விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றோடு உரு கெழு மரபின் அயிரை பரைஇ, வேந்தரும் வேளிரும் பின்வந்து பணிய, கொற்றம் எய்திய பெரியோர் மருக! வியல் உளை அரிமான் மறம் கெழு குருசில்! |
15 |
விரவுப் பணை முழங்கும், நிரை தோல் வரைப்பின், உரவுக் களிற்று வெல் கொடி நுடங்கும் பாசறை, ஆர் எயில் அலைத்த கல் கால் கவணை நார் அரி நறவின் கொங்கர் கோவே! உடலுநர்த் தபுத்த பொலந் தேர்க் குருசில்! |
20 |
வளைகடல் முழவின் தொண்டியோர் பொருந! நீ நீடு வாழிய, பெரும! நின்வயின் துவைத்த தும்பை நனவுற்று வினவும் மாற்று அருந் தெய்வத்துக் கூட்டம் முன்னிய புனல் மலி பேரியாறு இழிதந்தாங்கு, |
25 |
வருநர் வரையாச் செழும் பல் தாரம் கொளக் கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப, ஓவத்து அன்ன உரு கெழு நெடு நகர், பாவை அன்ன மகளிர் நாப்பண், புகன்ற மாண் பொறிப் பொலிந்த சாந்தமொடு |
30 |
தண் கமழ் கோதை சூடி, பூண் சுமந்து, திருவில் குலைஇத் திருமணி புரையும் உரு கெழு கருவிய பெரு மழை சேர்ந்து, வேங்கை விரிந்து, விசும்புறு சேட்சிமை, அருவி அரு வரை அன்ன மார்பின் |
35 |
சேண் நாறு நல் இசைச் சேயிழை கணவ! மாகம் சுடர மா விசும்பு உகக்கும் ஞாயிறு போல விளங்குதி, பல் நாள்!- ஈங்குக் காண்கு வந்தனென், யானே- உறு கால் எடுத்த ஓங்கு வரற் புணரி |
40 |
நுண் மணல் அடை கரை உடைதரும் தண் கடல் படப்பை நாடு கிழவோயே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 84 | 85 | 86 | 87 | 88 | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கால், கெழு, அன்ன, குருசில், கொளக், எய்திய, கடல், வண்ணம், பெயர், கவணை, சிறப்பும்