முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 56. வென்றிச் சிறப்பு
பதிற்றுப்பத்து - 56. வென்றிச் சிறப்பு
துறை : ஒள் வாள் அமலை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண், கோடியர் முழவின் முன்னர், ஆடல் வல்லான் அல்லன்; வாழ்க அவன், கண்ணி!- வலம் படு முரசம் துவைப்ப, வாள் உயர்த்து, இலங்கும் பூணன், பொலங் கொடி உழிஞையன், |
5 |
மடம் பெருமையின் உடன்று மேல் வந்த வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி வீந்து உகு போர்க்களத்து ஆடும் கோவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 54 | 55 | 56 | 57 | 58 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வாழ்ச்சி, மெய்ம்மறந்த, வேந்து, வண்ணம், வாள்