நற்றிணை - 6. குறிஞ்சி
நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால் நார் உரித்தன்ன மதன் இல் மாமை, குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண், திதலை அல்குல், பெருந் தோள், குறுமகட்கு எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே, |
5 |
'இவர் யார்?' என்குவள் அல்லள்; முனாஅது, அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி எறி மட மாற்கு வல்சி ஆகும் வல் வில் ஓரி கானம் நாறி, இரும் பல் ஒலிவரும் கூந்தல் |
|
பெரும் பேதுறுவள், யாம் வந்தனம் எனவே. |
நீரில் வளர்ந்த ஆம்பலின் உள்ளிற் புழையுடைய திரண்ட தண்டை நாருரித்தாற் போன்ற; அழகு குறைந்த மாமையையும்; குவளை போன்ற அழகு தங்கப்பெற்ற குளிர்ச்சியுடைய கண்ணையும்; திதலையுடைய அல்குலையும் பெரிய தோளையும் உடைய இளமகளாகிய நம்மாற் காதலிக்கப்பட்ட தலைவியிடத்து; நெருங்கச் சென்று எமது வருகையை முன்னாடிக் கூறுவாரைப் பெறின்; அவரை நோக்கி இவர் யாவரென்று கேட்பாளல்லள்; சுரத்திலுள்ள குமிழ மரத்தின் வளைந்த மூக்கினையுடைய முற்றிய கனிகள் கீழே உதிர்ந்து ஆங்குக் குதித்து விளையாட்டயர்கின்ற இள மானுக்கு வெறுப்பில்லாது உணவாகாநிற்கும்; வலிய வில்லையுடைய ஓரி என்பவனது கானம்போல நறுநாற்றமுடையவாகி; கரிய பலவாகித் தாழ்ந்த கூந்தலையுடைய அவள்தான்; யாம் வந்திருக்கின்றேம் என்பதைக் கேட்டவுடன்; களிப்பினாலே பெரிதும் மயக்கமெய்தா நிற்பள்;
இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன்நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - போன்ற, அழகு, யாம், இவர், சென்று, குவளை