நற்றிணை - 345. நெய்தல்
கானற் கண்டல் கழன்று உகு பைங் காய் நீல் நிற இருங் கழி உட்பட வீழ்ந்தென, உறு கால் தூக்க, தூங்கி ஆம்பல், சிறு வெண் காக்கை ஆவித்தன்ன, வெளிய விரியும் துறைவ! என்றும், |
5 |
அளிய பெரிய கேண்மை நும் போல், சால்பு எதிர்கொண்ட செம்மையோரும் தேறா நெஞ்சம் கையறுபு வாட, நீடின்று விரும்பார் ஆயின், வாழ்தல் மற்று எவனோ? தேய்கமா தௌவே! |
10 |
மிக்க காற்று மோதுதலானே கடற்கரைச் சோலையிலுள்ள கண்டல் மரத்திலிருந்து கழன்று விழுகின்ற பசிய காய்; நீல நிறத்தையுடைய பெரிய கழியிடத்து உள்ளே சென்று பொருந்தும்படி விழுதலாலே; அது மோதப்பட்டு ஆம்பலின் அரும்பு சாய்ந்து சிறிய வெளிய நீர்க்காக்கை கொட்டாவி விட்டாற் போன்ற வெளியவாய் மலராநிற்கும் துறைவனே!; எக் காலத்தும் கருணை செய்தலையுடைய பெரிய கேண்மையுடைய நும்மைப் போலச் சால்பினை எதிரேற்றுக்கொண்ட செம்மையுடையாரும்; தம்மை அடைந்தாரைப் பாதுகாப்பேமென்று அரிய சூள்வைத்து அவர் தௌ¤யாத நெஞ்சுடனே செயலழிந்து வாடும்படி நெடுநாள் காறும் விரும்பாதிருப்பாராயின்; அங்ஙனம் தஞ்சமென்று புகுந்தார் தாம் உயிர்வாழ்வது எவ்வாறோ?; நீ இங்கு நயந்து தௌ¤விக்கும் தௌ¤வு முழுவதூஉம் அழிந் தொழிவதாக; இவள் தான் படுகின்ற துன்பமெல்லாம் நுகர்ந்து அழிவாளாக!
தௌவிடை விலங்கியது. - நம்பி குட்டுவனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 343 | 344 | 345 | 346 | 347 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பெரிய, வெளிய, காய், கழன்று, கண்டல்