முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 325. நெய்தல் - தலைவி கூற்று
குறுந்தொகை - 325. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்தகாலத்து ஆற்றாளென எண்ணிக் கவலையுற்றதோழியை நோக்கி, "அவர் செல்லாரென நினைந்து போவீராக வெனச்சொன்னேன். இப்போது அவர் யாண்டுள்ளாரோ!" என்று தலைவிவருந்திக் கூறியது.)
சேறுஞ் சேறு மென்றலின் பண்டைத்தன் மாயச் செலவாச் செத்து மருங்கற்று மன்னிக் கழிகென் றேனே அன்னோ ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ கருங்கால் வெண்குருகு மேயும் |
5 |
பெருங்குளம் ஆயிற்றென் இடைமுலை நிறைந்தே. | |
- நன்னாகையார். |
முடிபு: என்றலின், செத்து, கழிக என்றேன்; எந்தை யாண்டுளன்கொல்லோ! என் இடைமுலை குளமாயிற்று.
கருத்து: தலைவன் பிரிவை யான் ஆற்றேனாயினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 323 | 324 | 325 | 326 | 327 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 325. நெய்தல் - தலைவி கூற்று, தலைவன், இலக்கியங்கள், நெய்தல், குறுந்தொகை, தலைவி, கூற்று, இடைமுலை, என்றேன், செத்து, சங்க, எட்டுத்தொகை, அவர்