முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 120. குறிஞ்சி - தலைவன் கூற்று
குறுந்தொகை - 120. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தலைவன் குறியிடத்தில் வந்ததைக் குறிப்பால் அறிவித்த காலத்தில் தலைவி அவன் வருதற்கு முன்னரே குறியல்லாததைக் குறியென றெண்ணிச் சென்று வறிதே மீண்டவளாதலின் வாராதொழிய, வருத்தமுற்ற தலைவன், “தலைவி நன்மையை உடையாள் என்பதை அறிந்தது போலப் பெறுதற் கரியாள் என்பதையும் இதுகாறும் அறிந்திலையே!” என்று தன் நெஞ்சை நோக்கிக் கூறியது.)
இல்லோன் இன்பங் காமுற் றாஅங்கு அரிதுவேட் டனையால் நெஞ்சே காதலி நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு அரியள் ஆகுதல் அறியா தோயே. |
|
- பரணர். |
முடிபு: நெஞ்சே, அரிது வேட்டனை; அறியாதோய்.
கருத்து:தலைவி பெறுதற்கரியள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 118 | 119 | 120 | 121 | 122 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 120. குறிஞ்சி - தலைவன் கூற்று, தலைவன், இலக்கியங்கள், குறிஞ்சி, நெஞ்சே, குறுந்தொகை, கூற்று, தலைவி, நமக்கு, ஆகுதல், சங்க, எட்டுத்தொகை