தகவல் பெறும் உரிமை - தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005
1. நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள்
2. அத்தகைய நிராகரிப்பிற்கு எதிரான முறையீடு எந்தக் காலகட்டத்திற்குள் இருந்தால் நல்லது என்பது பற்றித் தெரிவித்தல்
3. அப்பல்லேட் அதிகாரி பற்றிய விபரங்கள்
பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்காமலும், தகவல் தரும் அதிகாரியின் தகவல் ஆதாரத்துக்கு ஊறு விளைவிக்காமலும் இருக்கும் பட்சத்தில் தகவல் தொடர்பு அதிகாரி எந்த வகையில் தகவல் கோரப்படுகிறதோ அந்த வகையில் தகவல் தருவார்.
* ஒரு பகுதி, தகவல் பெற்றுக் கொள்ள அனுமதித்தால், மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி, அதைத் தெரிவிக்கும் நோட்டீஸை கொடுக்க வேண்டும்.என்ன தகவல்கள் கிடைக்கும்?
* ரெக்கார்டின் ஒரு பகுதி மட்டும் கேட்கப்பட்டிருந்ததால், ரெக்கார்டை பிரித்து ஆராய்ந்த பின், இருக்கும் தகவல்கள் வெளிப்படுத்துவதற்கு விதிவிலக்குப் பெறாத தகவல்கள் அளிக்கலாம்.
* உண்மை குறித்த விசாரணையில், கண்டுபிடிக்கப்பட்டு அவ்வாறான கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு. அந்த முடிவுக்கான காரணங்கள்.
* முடிவெடுத்தவருடைய பெயர் மற்றும் பதவி
* கட்டணம் கணக்கிடப்பட்டது பற்றிய விபரங்கள், விண்ணப்பதாரர் எவ்வளவு கட்டணம் டெபாசிட்டாக வைக்க வேண்டும் என்பது பற்றி.
* அவர் அல்லது அவரின் தகவல் வெளிப்படுத்த இயலாத பகுதிகளைப் பற்றிய மறுஆய்வு செய்வதற்கான உரிமை, விதிக்கப்பட்ட கட்டணத்தொகை பற்றி
* ஒரு வேளை எதிர்பார்க்கப்பட்ட தகவல் மூன்றாவது பார்ட்டியால் கொடுக்கப்பட்டால் அல்லது இவை ரகசியமானதால் மூன்றாவது நபர் கருத வேண்டும். மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி எழுத்துபூர்வமான அறிவிப்பை மூன்றாவது நபருக்குக் கொடுக்கலாம். வேண்டுகோளைப் பெற்றுக்கொண்ட 5 நாட்களுக்குள் அதனுடைய பிரிதியிடம் பேசுவது கருத்தில் கொள்ளப்படும்.
* மூன்றாவது நபருக்கு, மக்கள் தொடர்பு அதிகாரியின் முன்வந்து விளக்குவதற்கு அத்தகைய நோட்டீஸ் பெற்றுக்கொண்ட 10 நாட்களுக்குள் கண்டிப்பாக வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்.
1. எவை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாதவை.
பின்வருவன வெளிப்படையாகத் தெரிவிப்பதிலிருந்து விதிவிலக்கு பெற்றவை
1. வெளியிடப்படும் தகவல், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் ஊறு விளைவித்தால் மற்றும் பாதுகாப்பு, வியூகம், மாநிலத்தினுடைய அறிவியல் பொருளாதார நலன், அந்நிய மாநிலத்தோடு உறவு வைத்துக்கொள்ளத் தூண்டும் வகையிலான தகவல்.
2. வெளிப்படையாக அனுமதிக்கப்படாத தகவல்களை வெளியிடுதல். அதாவது, நீதிமன்றச் சட்டம் அல்லது ட்ரிப்யூனல் அல்லது வெளிப்படுத்தப்படும் தகவல் நீதிமன்ற அவமதிப்பாக இருந்தால்
3. வெளியிடப்படும் தகவல் நாடாளுமன்றம் அல்லது மாநில வட்டசபையின் உரிமையை பாதிக்கும் விதமாக இருந்தால்
4. வியாபார நம்பிக்கை, வர்த்தக ரகசிய அல்லது அறிவுகள் சொத்துக்கள் தகவல் உட்பட; இத்தகவல்கள் வெளிப்படுத்தப்படுவது, மூன்றாவது நபரின்போட்டியிடுகிற நிலைக்கு ஊறுவிளைவிப்பதாக இருந்தால். சம்மந்தப்பட்ட அதிகாரி, அத்தகைய தகவலை தெரிவிப்பதில் பெரும் மக்களின் தேவை இருப்பதாகத் திருப்தி அடைந்தாலொழிய தகவல் தெரிவிக்கக் கூடாது.
5. தனது பொறுப்பு சார்ந்த உறவால் ஒருவருக்குக் கிடைக்கும் தகவல்களில் அவ்வாறான தகவலை வெளியிடுவது பொது நலனுக்கு பெரிதும் உதவக்கூடியதாக இல்லாத போது சம்மந்தப்பட்ட அதிகாரி அதனை வெளியிடக்கூடாது.
6. அந்நிய அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட ரகசியத் தகவல்கள்.
7. தகவல் வெளியிடுவது, எந்த நபரின் வாழ்க்கையை அல்லது அவரின் பாதுகாப்புக்கு இடர் உண்டாக்குமானால் அல்லது தகவல் பெறும் மூலத்தைக் கண்டறிதல் அல்லது சட்ட அமலாக்கத்திற்காகத் துணைபுரிவதற்காக ரகசிய கொடுக்கப்படுபவை அல்லது பாதுகாப்பு காரணங்கள்.
8. தகவல், விசாரணை நடைமுறையில் முட்டுக் கட்டையை ஏற்படுத்தினால் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் வழக்குத் தொடர்வதால்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, Right to Information Act, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, தகவல், அல்லது, சட்டம், அதிகாரி, மூன்றாவது, இருந்தால், தொடர்பு, வேண்டும், பெறும், உரிமை, அறியும், தகவல்கள், உரிமைச், மக்கள், பற்றிய, அத்தகைய, காரணங்கள், இந்தியச், தகவலை, அவரின், பற்றி, கட்டணம், வெளியிடுவது, சம்மந்தப்பட்ட, | , அந்நிய, பாதுகாப்பு, வெளியிடப்படும், வெளிப்படையாகத், கிடைக்கும், நாட்களுக்குள், அவ்வாறான, பெற்றுக்கொண்ட, ரகசிய, இருக்கும், inidan, indian, penal, தண்டனைச், இந்திய, right, information, code, என்பது, எந்த, வகையில், அந்த, அதிகாரியின், விளைவிக்காமலும், விபரங்கள், பாதுகாப்புக்கு, பகுதி