கேள்வி எண் 38 - சட்டக்கேள்விகள் 100
38. நான் சவுதி அரேபியாவில் வசிக்கும் NRI, எளிய முறையில் விவாகரத்து செய்வது எப்படி?
நான் ஒரு NRI சவுதி அரேபியாவில் வசிக்கிறேன். என் மனைவி புதுடெல்லியில் வசிக்கிறார். இந்து முறைப்படி முறையாக திருமணம் செய்த நான் தவிர்க்க முடியாத காரணத்தால், தற்போது என் மனைவியை விவாகரத்து செய்ய விரும்புகிறேன். என் மனைவி ஏற்கெனவே திருமணத்திற்கு முன்பு சீக்கிய மதத்திற்கு மாறியவர். தற்போது மீண்டும் கிறித்துவ மதத்தையே கடைப்பிடித்து வருகிறார். நான் விவாகரத்து தொடர முடியுமா? நான் செய்ய வேண்டியது என்ன? மேலும் நான் ஒரு NRI யாக இருப்பதால், விரைவாக, எளிய வழியில் அதிக பயணம் மேற்கொள்ளாமல், விவாகரத்து செய்வது பற்றி தயவு செய்து கூறவும்?
- கி. கிருஷ்ணராஜு, சவுதிஅரேபியா.
பதில் :
முதலில் நீங்கள் NRI யாக இருப்பதற்கும், உங்கள் பிரச்சினைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
உங்கள் விவகாரத்து இந்து திருமணச் சட்டம் 1956-ன் செயல்முறைகளைக் கொண்டே அமையும். ஏனெனில், நீங்கள் இருவருமே உங்களுடைய திருமணத்தின் போது, இந்துவாகவே இருந்துள்ளீர்கள். இந்து முறைப்படியே திருமணம் செய்துள்ளீர்கள்.
நீங்கள் Judical sepration உட்பிரிவு 10 அல்லது 13-ன் மூலமாக விவாகரத்து கோர முடியும். மேலும் நீங்கள் ஒரு சிறந்த குடும்பநல வழக்குரைஞரை அணுகுவதன் மூலம் உங்கள் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துகொள்ளலாம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, நான், விவாகரத்து, நீங்கள், உங்கள், இந்து, மேலும், தற்போது, செய்ய, மனைவி, சவுதி, அரேபியாவில், எளிய, செய்வது, திருமணம்