சத்ய சோதனை - பக்கம் 447
வதற்கு முற்றும் விட்டுவிட்டார். வந்து சேர்ந்த ஒரு நாளைக்குள்ளேயே தங்கள் சொந்த வீட்டில் வாழ்வதாகவே உணரும்படி ஸ்ரீ ருத்ராவைச் சேர்ந்தவர்கள் செய்துவிட்டனர். ஆகையால், தாங்கள் போனிக்ஸில் இருப்பதாகவே அவர்கள் எண்ணினர். போனிக்ஸ் கோஷ்டியினர் சாந்திநிகேதனத்தில் இருக்கின்றனர் என்பது நான் பம்பாயில் வந்து இறங்கிய பிறகு தான் எனக்குத் தெரியும். ஆனவே, கோகலேயைப் பார்த்து விட்டு, எவ்வளவு சீக்கிரத்தில் சாத்தியமோ அவ்வளவு சீக்கிரமாக அவர்களைப் போய்ப் பார்க்கவேண்டும் என்று நான் அவசரப்பட்டேன். பம்பாயில் எனக்கு நடந்த வரவேற்புகள், ஒரு சின்னச் சத்தியாக்கிரகம் என்று சொல்லக்கூடிய ஒன்றை நடத்தும் சந்தர்ப்பத்தை எனக்கு அளித்தன. என்னைக் கௌரவிப்பதற்காக ஸ்ரீ ஜஹாங்கீர் பெடிட்டின் இல்லத்தில் நடந்த விருந்தின் போது குஜராத்தியில் பேச நான் துணியவில்லை. வாழ்நாளின் சிறந்த காலத்தையெல்லாம் ஒப்பந்தத் தொழிலாளருடன் வாழ்வதில் கழித்த நான், அரண்மனை போன்று இருந்த அந்த ஆடம்பரச் சூழ்நிலையில், ஒரு முழு நாட்டுப்புறத்தான் போல் இருப்பதாகவே எண்ணிக் கொண்டேன். அப்பொழுது நான் கத்தியவாரிகளைப் போல் வேட்டி கட்டிக்கொண்டு சட்டையும் போட்டிருந்தேன். எனவே, நான் இப்பொழுது இருப்பதைவிட அப்பொழுது அதிக நாகரிக முள்ளவனாகவே தோன்றினாலும், பெடிட் மாளிகையின் ஆடம்பரமும் பிரகாசமும் என்னைத் திக்குமுக்காடச் செய்து விட்டன. என்றாலும், ஸர் பிரோஸ்ஷாவின் பாதுகாப்பின் கீழ் தைரியம் அடைந்து ஒருவாறு ஒழுங்காகவே சமாளித்துக் கொண்டேன். அதன் பிறகு குஜராத்தியரின் வரவேற்பு நடந்தது. எனக்கு ஒரு வரவேற்பு உபசாரம் நடத்தியே தீருவதென்று அவர்கள் தீர்மானித்து விட்டார்கள். காலஞ்சென்ற உத்தமலால் திரிவேதி, இந்த வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்தார். அக் கூட்டத்தின் நிகழ்ச்சி முறை இன்னது என்பதை முன்னாடியே அறிந்து கொண்டேன். ஸ்ரீ ஜின்னாவும் குஜராத்தியாகையால் அவரும் வந்திருந்தார். அங்கே அவர் தலைமை வகித்தாரா, முக்கியப் பேச்சாளராக இருந்தாரா என்பது எனக்கு ஞாபகம் இல்லை. அவர் ஆங்கிலத்தில் சுருக்கமாகவும் இனிமையாகவும் பேசினார். பேசிய மற்றவர்களும் அநேகமாக ஆங்கிலத்திலேயே பேசினார்கள் என்றுதான் எனக்கு ஞாபகம். நான் பேச வேண்டிய சமயம் வந்தபோது என் வந்தனத்தைக் குஜராத்தியில் தெரிவித்துக் கொண்டேன். குஜராத்தியினிடமும் ஹிந்துஸ்தானியினிடமும் எனக்கு பற்று அதிகம் என்றும் எனக்கு விளக்கினேன். குஜராத்திகளைக் கொண்ட ஒரு கூட்டத்தில் ஆங்கிலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 445 | 446 | 447 | 448 | 449 | ... | 604 | 605 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான், எனக்கு, கொண்டேன், வரவேற்பு, ஸ்ரீ - Sathya Sothanai - சத்ய சோதனை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்