நாடி ஜோதிட விதி 01 - நாடி ஜோதிட விதிகள்
ஒரே திசையை குறிக்கும் ராசிகளில் உள்ள கிரகங்கள் இணைவு பெற்று செயல்படும்.
ஒரே திசையில் இருக்கும் கிரகங்கள் இணைந்து செயலாற்றும் என்பதின் அடிப்படைக் கருத்து என்னவென்றால், திரிகோண ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு ஒரே திசையான கிழக்குத் திசையையும், நெருப்புத் தத்துவத்தைக் குறிப்பதாகும். இதனால் நெருப்புத் தத்துவ இராசிகள் ஒன்றாக செயல்படும்.
அதேபோல், மற்ற திரிகோணங்களை அறிந்துகொள்ளவும்.
மீனம்வடக்கு | மேஷம் கிழக்கு | ரிஷபம் தெற்கு | மிதுனம் மேற்கு |
கும்பம் மேற்கு | இராசிக் கட்டம் | கடகம் வடக்கு | |
மகரம்தெற்கு | சிம்மம் கிழக்கு | ||
தனுசுகிழக்கு | விருச்சிகம் வடக்கு | துலாம்மேற்கு | கன்னி தெற்கு |
ஒரே திசையை குறிக்கும் ராசிகள் :
மேஷம், சிம்மம், தனுசு இம்மூன்று ராசிகளும் கிழக்கு திசையை குறிக்கும்
ரிஷபம், கண்ணி, மகரம் இம்மூன்று ராசிகளும் தெற்கு திசையை குறிக்கும்
மிதுனம், துலாம், கும்பம் இம்மூன்று ராசிகளும் மேற்கு திசையை குறிக்கும்
கடகம், விருச்சிகம், மீனம் இம்மூன்று ராசிகளும் வடக்கு திசையை குறிக்கும்
கிழக்கு ராசிகள் :
மேஷத்திற்கு ஐந்தாமிடம் சிம்மம், ஒன்பதாமிடம் தனுசு.
சிம்மத்திற்கு ஐந்தாமிடம் தனுசு, ஒன்பதாமிடம் மேஷம்.
தனுசுவிற்கு ஐந்தாமிடம் மேஷம், ஒன்பதாமிடம் சிம்மம்.
இப்படி ஒன்றுக்கொன்று திரிகோணமாக (1,5,9 ஆக) அமைகிறது
இதுபோலவே மற்ற திசைகளுக்கு உரிய ராசிகளும் அமையும்.
மேலும் ஒரே திசையில் உள்ள நட்சத்திர அதிபதிகள் ஒன்றாகவே அமைவார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாடி ஜோதிட விதி 01 - நாடி ஜோதிட விதிகள் - Law's of Nadi Astrology - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்