நவக்கிரக மந்திரங்கள் - புதன்
புதன் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் புதன் தசை அல்லது புதன் அந்தர் தசையின் போது:
புதனின் கடவுளான விஷ்ணுவைத் தினமும் வழிபடவேண்டும். தினசரி விஷ்ணு சோஸ்திரம் படிக்க வேண்டும். புத மூல மந்திர ஜபம்:
"ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் புதாய நமஹ",
40 நாட்களில் 17000 முறை சொல்ல வேண்டும்.
புதன் ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
ப்ரிங்கு கலிகா ச்யாம்
ருபேணா ப்ரதிமம் புதம்!
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
தம் புதம் ப்ரணமாம் யஹம்!!
தமிழில்,
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி!
பதந்தந் தாள்வாய் பண்ணொலியானே
உதவியே யருளும் உத்தமா போற்றி!!
தொண்டு: புதனன்று நன்கொடையாக உளுத்தம் பருப்பு கொடுக்கவேண்டும்.
நோன்பு நாள்: புதன்.
பூஜை: விஷ்ணு பூஜை.
ருத்ராட்சம்: 10 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.
புத காயத்ரி மந்திரம்
கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி|
தந்நோ புத: ப்ரசோதயாத்||
புதன் தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின், 35 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புதன் - Mercury - Mantras for the nine planets - நவக்கிரக மந்திரங்கள் - Mantras - மந்திரங்கள் - Astrology - ஜோதிடம்