நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 50
இதுவரையில் நாம் எப்படி ஜாதகம் போடுவது, எப்படி பலன் சொல்வது, என்று கடந்த 49 பாடங்களில் பார்த்து வந்தோம். இந்த 49 பாடங்களுடன் நமது ஜோதிடப் பாடங்கள் ஒரு முடிவுக்கு வருகின்றன. இதை முழுவதும் படித்தவர்களுக்கு நிச்சயமாக ஜோதிடத்தைப் பற்றி ஓரளவிற்குத் தெரிந்து இருக்கும். இதை மட்டும் படித்தால் போதுமென்று நாம் எப்போதுமே கூறியது இல்லை. இது உங்களுக்கு அடிப்படை உண்மைகளைக் கற்றுக் கொடுத்து இருக்கும். இதிலிருந்து இன்னும் புத்தகங்களைப் படித்து ஜோதிட அறிவை வளமாக்கிக் கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம். கீழ் வரும் புத்தகங்களை நீங்கள் வாங்கிப் படியுங்கள்.
1. Dr BV ராமன் எழுதியவை:
(அ) How to Judge a Horoscope (Volume I & II)
(ஆ) Three hundred Important Combinations
(இ) Notable Horoscopes
(ஈ) Garaha Bava Balas
இவைகளில் நம் நாட்டு ஜோதிட முறைகளைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். இதைத் தவிர பல நூல்களை அவர் எழுதியுள்ளார். நாம் முக்கியமான சில நூல்களை மட்டும் குறிப்பிட்டுள்ளோம்.
2. திரு. K.S.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதியுள்ள நூல்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவைகள். மிகவும் கருத்தாழம் மிக்கவை.
3. இதைத் தவிர நமது முன்னோர்கள் எழுதியுள்ள நூல்களான
(அ) பலதீபிகை
(ஆ) பிருஹத் ஜாதகம்
(இ) உத்தரகாலாம்ருதம்
(ஈ) காலவிதானம்
(உ) காலப்பிரகாசிகை
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 50 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - You can become a Astrologer! - Astrology - ஜோதிடம்