நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 48
பொதுவாக ஜோதிடர்கள் உதவி மிகத் தேவைப்படுவது திருமணத்தின்போது தான். திருமணம் எப்போது ஆகும் என்பது முதல் கேள்வி. அடுத்தது ஜாதகப் பொருத்தம் உள்ளதா ? என்பது இரண்டாவது கேள்வி.ஜாதகப் பொருத்தத்தைப் பற்றி “விவாகப் பொருத்தம் - ஒரு விவாதம்” என்ற தலைப்பில் நாம் எழுதி உள்ளோம்.
அதை வாசகர்கள் படித்து இருப்பார்கள் என நம்புகிறோம். நாம் எழுதியது தசப்பொருத்தம் என்னும் பத்துப் பொருத்தங்களைப் பற்றித்தான். இந்தப்பத்துப் பொருத்தங்களைப் பற்றி நமது ஜோதிட நூலகள் ( ஜாதக சந்திரிகை, காலப் பிரகாசிகை தேவ கேரளம் போன்றவை) என்ன கூறி இருக்கின்றன என்பதை நாம் விரிவாக எழுதி இருந்தோம். திருமணத்திற்கு இந்த வெறும் தசப் பொருத்தங்கள், செவ்வாய் தோஷம், தசா சந்தி, தோஷ சாம்யம் ஆகியவற்றை மட்டும் பார்த்தால் போதுமா? என்றால் நாம் போதாது என்றுதான் கூறுவோம். இந்த 10-ப் பொருத்தங்களை மட்டும் பார்த்துச் செய்யும் விவாகங்கள் மகிழ்ச்சியில் முடிவதில்லை. அப்போது என்னதான் செய்ய வேண்டும்? இன்னும் என்ன பார்க்க வேண்டும்? என நீங்கள் கேட்க்கலாம்.
முதலில் இருவர் ஜாதகத்தையும் தனித்தனியாக இலக்கினம், சந்திரன், முதலியன கெடாமல் இருக்கின்றனவா? எனப் பார்க்க வேண்டும். இருவருக்கும் ஆயுள் பாவம் நன்றாக உள்ளதா? எனப் பார்க்க வேண்டும். அதைப் போன்று புத்திரபாவம் நன்றாக உள்ளதா எனவும், நோய்நொடியின்றி வாழ்வார்களா ? எனவும் பார்க்க வேண்டும். பின்பு தொழில், வரும் தசைகள் ஆகியவற்றைப் பார்க்க வேண்டும். இதையெல்லாம் பார்க்காமல் வெறும் 10-ப் பொருத்தங்களை மட்டும் பார்த்துச் செய்யும் திருமணங்கள் நாம் எதிர்பார்ப்பதுபோல் இருப்பதில்லை. நாம் கீழே ஒர் உதாரண ஜாதகத்தைக் கொடுத்துள்ளோம்.
இது ஒரு பெண்ணின் ஜாதகம்:-
ராசி
துலா இலக்கினம்
மேஷம் : சூரியன், கேது
துலாம் : குரு, ராகு
தனுசு : சந்திரன், சனி
கும்பம் : செவ்வாய்
மீனம் : புதன், சுக்கிரன்
நவாம்சம்
தனுசு இலக்கினம்
மேஷம் : சனி
மிதுனம் : கேது
சிம்மம் : சந்திரன்
கன்னி : சுக்கிரன்
துலாம் : சூரியன், குரு
தனுசு : ராகு
கும்பம் : செவ்வாய்
மீனம் : புதன்
ஜனன கால இருப்பு தசை:- சுக்கிரன் - வருஷம் 15 மாதம் 6 நாள் 22.
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 48 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - You can become a Astrologer! - Astrology - ஜோதிடம்