நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 39
நீங்கள் இது வரையில் 12 வீடுகளைப் பற்றியும், அதில் எந்தெந்த கிரகங்கள் இருந்தால் என்ன பலன் என்பதையும் தெரிந்து கொண்டீர்கள். இந்தப் பாடத்தில் மாந்தியைப்பற்றித் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாக கேரள மாநிலத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் மாந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்த மாந்திக்கு குளிகன் என்ற மற்றொறு பெயரும் உண்டு. இதை ஆங்கிலத்தில் Titan- என்றழைப்பர்கள். அதாவது ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு உப கிரகமுண்டு. பூமிக்கு, சந்திரன் உப கிரகமாக இருப்பதுபோல் சனிக்கு இந்த மாந்தி உப கிரகம். சனிக்கு மொத்தம் 10 உப கிரகங்களுண்டு. இந்தப் 10-ல் ஒன்றுதான் மாந்தி என்றழைக்கப்படும் குளிகனாகும். இது சனிக்கு உபகிரகமாக இருப்பதனால் தானோ என்னமோ இதை சனியின் பிள்ளை என்று நமது பெரியவர்கள் அழைத்தனர். இந்த மாந்தியை எப்படி ஜாதகத்தில் குறிப்பது என்று பார்ப்போம்.
மாந்தி ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உதயமாவார். இதை நாம் நாழிகையில் கீழே கொடுத்துள்ளோம்.
மாந்தி உதயம் | பகல்(நாழிகை) | இரவு (நாழிகை) |
ஞாயிறு | 26 | 10 |
திங்கள் | 22 | 06 |
செவ்வாய் | 18 | 02 |
புதன் | 14 | 26 |
வியாழன் | 10 | 22 |
வெள்ளி | 06 | 18 |
சனி | 02 | 14 |
ஞாயிற்றுக்கிழமை பகலில் சூரிய உதயத்திலிருந்து 26 நாழிகைக்கு மாந்தி என்கின்ற குளிகன் உதயமாகும். இரவில் ஒரு குழந்தை பிறந்தால் சூரிய அஸ்தமனத்தி லிருந்து 10 நாழிகைக்குக் மாந்தி உதயமாகும். இரவில் குறிப்பிட்டுள்ள நாழிகைகளெல்லாம் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு எனக் கொள்ள வேண்டும். இதைப்போல் ஒவ்வொரு கிழமைக்கும் எந்தெந்த நாழிகையில் மாந்தி உதயமாகிறது எனக்கண்டு மாந்தியை ஜாதகத்தில் கணிக்க வேண்டும்.
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 39 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - You can become a Astrologer! - Astrology - ஜோதிடம்